பி.எம்.இந்தியா
லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் ஞானம், கருணை மற்றும் பொது நலனுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, இந்தியா முழுவதுமே அவரை ஆழ்ந்த மரியாதையுடனும், பக்தியுடனும் நினைவுகூர்வதாக திரு மோடி கூறியுள்ளார்.
அவரது வாழ்க்கை நல்லாட்சி, தேசபக்தி மற்றும் கலாச்சாரப் பெருமைக்கான ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போதும் தைரியத்துடனும், வலுவான கடமை உணர்வுடனும் வழிநடத்தினார் என்று அவர் கூறியுள்ளார்.
அனைவருக்கும் நீதி மற்றும் நலனை உறுதி செய்வதில் அவரது இணையற்ற பங்களிப்பையும், நாடு முழுவதும் உள்ள புனிதக் கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களைப் புனரமைப்பதற்கான அவரது முயற்சிகளையும் எடுத்துரைத்துள்ள பிரதமர், அவரது பணி இந்தியாவின் கலாச்சார விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், தேசக் கட்டுமானத்திற்கும் லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் அர்ப்பணிப்பு நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“लोकमाता अहिल्याबाई होल्कर जी को उनकी जयंती पर कोटि–कोटि नमन! बुद्धिमत्ता, करुणा और जनकल्याण के प्रति अटूट निष्ठा को लेकर पूरा देश उन्हें आदर और सम्मान के साथ स्मरण करता है। उनका जीवन सुशासन, राष्ट्रभक्ति और सांस्कृतिक गौरव का एक उत्कृष्ट उदाहरण है। उन्होंने सदैव साहस और कर्तव्यनिष्ठा के साथ नेतृत्व किया। देशभर में पावन मंदिरों और तीर्थस्थलों के पुनर्निर्माण से लेकर सभी के लिए न्याय और कल्याण सुनिश्चित करने में उन्होंने अतुलनीय योगदान दिया। उन्होंने भारत की सांस्कृतिक चेतना को और सशक्त बनाया। समाज, संस्कृति और राष्ट्र निर्माण के प्रति उनका समर्पण भाव देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।”
***
(Release ID: 2267152)
TV/PKV/RJ
लोकमाता अहिल्याबाई होल्कर जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन! बुद्धिमत्ता, करुणा और जनकल्याण के प्रति अटूट निष्ठा को लेकर पूरा देश उन्हें आदर और सम्मान के साथ स्मरण करता है। उनका जीवन सुशासन, राष्ट्रभक्ति और सांस्कृतिक गौरव का एक उत्कृष्ट उदाहरण है। उन्होंने सदैव साहस और…
— Narendra Modi (@narendramodi) May 31, 2026