Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து


18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார். இந்த போட்டித் தொடர் முழுவதும், இந்திய மகளிர் அணி அபாரமான மன உறுதியை வெளிப்படுத்தியதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மகளிர் ஹாக்கி விளையாட்டில், வளர்ந்து வரும் வலிமையையும், வீராங்கனைகளின் அளப்பரிய திறனையும் இந்தச் சாதனை பிரதிபலிப்பதாக உள்ளது என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இத்தொடர் முழுவதும் இந்திய அணி அபார மன உறுதியை வெளிப்படுத்தியது. இந்தியாவில் மகளிர் ஹாக்கி விளையாட்டின் வளர்ந்து வரும் வலிமையையும், நமது வீராங்கனைகளின் அளப்பரிய திறனையும் இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது. இந்திய அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269825&reg=3&lang=1

(Release ID: 2269825)

****

TV/SV/SH