Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில், அடைந்த சாதனைகள் அனைத்தும் நாட்டு மக்களின் கூட்டு முயற்சிகள், விருப்பங்களின் விளைவாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

140 கோடி மக்களின் அன்பும், ஆசியும், தமக்கு மிகப்பெரிய வலிமையாகவும், உத்வேகம் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். பிரதமரின் ஜன்மன், தார்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகியத் திட்டங்களை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ‘அந்த்யோதயாஎனும் உண்மையான உணர்வுடன், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்வதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே,

தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகளில், அடைந்துள்ள மகத்தான சாதனைகள் அனைத்தும், நாட்டு மக்களின் கூட்டு முயற்சிகள், விருப்பங்களின் விளைவாக அமைந்தது. 140 கோடி மக்களின் அன்பும், ஆசியும், எனது மிகப்பெரிய வலிமையாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது. பிரதமரின் ஜன்மன், தர்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘அந்த்யோதயாஎனும் உண்மையான உணர்வுடன், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

***

(Release ID: 2271292)

TV/SV/RJ