பி.எம்.இந்தியா
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜி–யின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், மக்களின் அளப்பரிய ஆசிகள், அன்பு ஆகியவற்றால் சாத்தியமாகியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்ற, வளமான இந்தியாவை உருவாக்கும் உறுதியான நிலைப்பாட்டுடன், நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு, அதிக உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக வலைதளத்தில், பிரதமர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2271374)
TV/SV/RJ
आपकी स्नेहिल शुभकामनाओं के लिए बहुत-बहुत आभार माननीय ओम बिरला जी। भारतीय लोकतंत्र में यह ऐतिहासिक पड़ाव जनता-जनार्दन के अपार आशीर्वाद और अपनत्व का सुपरिणाम है। हम सभी मिलकर विकसित, आत्मनिर्भर और समृद्ध भारत के निर्माण के संकल्प को और अधिक दृढ़ता के साथ आगे बढ़ाते रहेंगे।… https://t.co/8FsCitrxYm
— Narendra Modi (@narendramodi) June 10, 2026