பி.எம்.இந்தியா
அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஆண்டி ஜஸ்ஸி, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அமேசான் நிறுவனம் 48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது என்றும், இது இந்தியாவில் முதலீடு செய்வதில், உலக நாடுகளின் அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
திரு ஆண்டி ஜஸ்ஸியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது. இந்தியாவில், அமேசான் நிறுவனம் 48 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளதை வரவேற்கிறேன். இது நாட்டில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதே வேளையில், இந்தியாவில் முதலீடு செய்வதில், உலக நாடுகளிடையே ஆர்வம் அதிகரித்து வருவதை இது எடுத்துக் காட்டுகிறது.
***
(Release ID: 2277727)
SS/SV/RJ
A great meeting with Mr. Andy Jassy. I welcome Amazon's record $48 billion investment in India. This will create new opportunities for our youth. At the same time, it shows the growing interest across the world to invest in India!@amazon https://t.co/emr6Dd9Cps
— Narendra Modi (@narendramodi) June 25, 2026