Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவிற்கு பிரதமர் வாழ்த்து


2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீமா 58.65 மீட்டர் தூரம் எறிந்து இந்தப் பதக்கத்தை வென்றதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த சாதனை இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன்நாட்டின் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும்அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் 58.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவுக்கு வாழ்த்துகள். அவரது முயற்சிகள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளதுடன்நமது தேசத்தின் இளைஞர்களுக்கு ஊக்கமளித்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.”  

***

SS/PLM/RJ/SE