ஆவணங்கள்:
1. பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு குறித்த ஆசியான்-இந்தியா கூட்டறிக்கை
2. இணைய மோசடிகள், அது தொடர்பான குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டுத் தலைவர்களின் அறிக்கை
3. நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துதல்: நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கம் குறித்த கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டுப் பிரகடனம்
அறிவிப்புகள்:
1. 23-வது இந்திய- ஆசியான் உச்சிமாநாடு
1. இணைப்புத்திறன், அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோரக் காவல்படை ஒத்துழைப்பு, கடல்சார் விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வு, கடல் மாலுமிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நீண்டகால ஆசியான்-இந்திய கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம்;
2. பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டிற்கான கூட்டு சைபர் தடயவியல் பயிற்சித் திட்டம்;
3. ஆசியான்-இந்திய அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றங்கள்;
4. ஆசியான்-இந்திய விண்வெளி ஹேக்கத்தான்;
5. சுரங்கம், முக்கிய கனிமங்கள் துறைகளில் ஆசியான்-இந்திய ஒத்துழைப்பு;
6. இளைஞர் மாநாடு, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிமாற்றம், புத்தொழில் ஹேக்கத்தான்கள் மூலம் ஆசியான்-இந்திய இளைஞர் இணைப்பு;
7. நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஆசியான் நாடுகளுக்கான கல்வி உதவித்தொகையை மேம்படுத்துதல்;
8. வேவ்ஸ் 2027-ல் ஆசியான்-இந்திய படைப்பாற்றல் கூட்டாண்மை அரங்கம்;
9. ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்னணு விசா.
2. 21-வது கிழக்காசிய உச்சிமாநாடு
கூட்டுப் பயிற்சி, அவசரகாலப் பதிலளிப்பில் ஒத்துழைப்பிற்கான மாலுமிகளின் பாதுகாப்பு முன்முயற்சி.
இணையவழி மோசடிகள், சைபர் குற்றங்கள் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களால் ஏற்படும் நவீன கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் சைபர் குற்ற மாநாடு.
லோத்தலில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் கடல்சார் பாரம்பரியத் திருவிழா.
கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகளுடன் கல்விசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நாளந்தாவில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் பல்கலைக்கழக மாநாடு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337611®=3&lang=1
****
SK/BR/SH