பிலிப்பைன்ஸின் மணிலாவில் இன்று (2026 நவம்பர் 17) நடைபெற்ற 23-வது இந்தியா- ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்காசிய உச்சி மாநாட்டிற்கிடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் திரு அனுதின் சார்ன்விராகுலை சந்தித்து பேசினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, உத்திசார் நட்புறவு ஆகியவை முன்னேற்றம் கண்டன. இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது.
வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, இணைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், கலாச்சாரம், சுற்றுலா, இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட அம்சங்களில் இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
பிம்ஸ்டெக், ஐஓஆர்ஏ, மெகாங் கங்கா ஒத்துழைப்பு, ஆசியான் தலைமையிலான கட்டமைப்பு போன்ற பிராந்திய மன்றங்களில் இணைந்து பணியாற்றுவதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டனர். இருதரப்பு கூட்டண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவும், தாய்லாந்தும் நாகரீகம், கலாச்சார பாரம்பரியம், மக்களுக்கிடையேயான பிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய நட்புறவைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, ஆசியாவுடனான விரிவான உத்திசார் கூட்டாண்மை ஆகியவற்றின் கட்டமைப்புக்குள் தாய்லாந்து முக்கிய கூட்டாளியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337423®=3&lang=1
***
PD/LN/GS
Delighted to meet Prime Minister Anutin Charnvirakul of Thailand on the sidelines of the ASEAN-related summits in Manila. Personally congratulated him on assuming office and conveyed my best wishes. India and Thailand are maritime neighbours, bound by centuries of shared history, culture and spiritual traditions. We discussed ways to add fresh momentum to our Strategic Partnership in sectors like: Trade. Defence and security. Connectivity. Culture. รู้สึกยินดีเป็นอย่างยิ่งที่ได้พบหารือกับนายอนุทิน ชาญวีรกูล นายกรัฐมนตรีของไทย ในระหว่างการประชุมสุดยอดอาเซียน ณ กรุงมะนิลา โดยได้กล่าวแสดงความยินดีด้วยตนเองในโอกาสที่ท่านเข้ารับตำแหน่งนายกรัฐมนตรี พร้อมทั้งมอบคำอวยพรให้ประสบความสำเร็จในการปฏิบัติหน้าที่ อินเดียและไทยเป็นประเทศเพื่อนบ้านทางทะเลที่มีสายสัมพันธ์อันแน่นแฟ้น สืบเนื่องจากประวัติศาสตร์ วัฒนธรรม และขนบธรรมเนียมทางจิตวิญญาณที่มีร่วมกันมายาวนานหลายศตวรรษ ในการหารือครั้งนี้ เราได้แลกเปลี่ยนความคิดเห็นเกี่ยวกับแนวทางในการผลักดันความเป็นหุ้นส่วนทางยุทธศาสตร์ระหว่างสองประเทศให้มีพลวัตและความคืบหน้ามากยิ่งขึ้นในด้านต่าง ๆ ได้แก่ การค้า การป้องกันประเทศและความมั่นคง การเชื่อมโยง/ความสัมพันธ์ต่าง ๆ วัฒนธรรม
— Narendra Modi (@narendramodi) November 17, 2026