பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள கல்சா திவான் குருத்வாராவிற்கு சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி பஞ்ச் பியாரே முன்னிலையில் குருத்வாராவின் மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் செனட்டர் திரு பிரான்சிஸ் ஜோசப் எஸ்குடேரோ, மணிலா நகர மேயர் திரு பிரான்சிஸ்கோ இஸ்கோ மொரேனோ உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த குருத்வாரா 1901-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1903-ம் ஆண்டு முறைப்படி அமைக்கப்பட்டு 1924-ம் ஆண்டு கல்சா திவான் என்று பதிவுசெய்யப்பட்டது. இந்த கர்சா திவான் குருத்வாரா பிலிப்பைன்ஸின் மிகப்பழமையான குருத்வாரா என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. இது, மணிலாவில் உள்ள சீக்கியர்கள், இதர சமூகத்தினருக்கு ஆன்மீகம், கலாச்சாரம், பிற உதவிகள் மூலம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
கல்சா திவான் குருத்வாரா இந்திய சீக்கிய சமூகத்தினர், பிலிப்பைன்ஸ் சமூகத்தினரிடையே முக்கியப் பாலமாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337287®=3&lang=1
***
VJ/PD/IR/LDN/GS
Feeling very blessed to be at the Gurudwara Khalsa Diwan in Manila. ਗੁਰਦੁਆਰਾ ਖ਼ਾਲਸਾ ਦੀਵਾਨ, ਮਨੀਲਾ ਵਿਖੇ ਆ ਕੇ ਬਹੁਤ ਵਡਭਾਗਾ ਮਹਿਸੂਸ ਕਰ ਰਿਹਾ ਹਾਂ। https://t.co/JNuNFMq6Ja
— Narendra Modi (@narendramodi) November 17, 2026