Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் மகளிர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரியா கங்காஸுக்கு பிரதமர் வாழ்த்து


2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரியா கங்காஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி, பிரியா கங்காஸின் திறமையையும் மன வலிமையையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் பிரியா கங்காஸ் ஒரு மகத்தான தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்! இது அவரது குறிப்பிடத்தக்க திறமையையும் மன வலிமையையும் பிரதிபலிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”

***

(Release ID: 2293182)

TV/PLM/RJ