Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதை வெளியீட்டின்போது தாம் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


‘இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்’ என்ற தலைப்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதிய சுயசரிதை வெளியீட்டின்போது தாம் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இப்புத்தகத்தின் முக்கிய கருப்பொருள்களைக் குறிப்பிட்ட அவர், திரு கோவிந்தின் ஊக்கமளிக்கும் போராட்டங்கள், பல்வேறு பணிகளில் அவருடைய சிறப்பான பங்களிப்புகள், பொதுச் சேவையில் அவருடைய ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த நூல் சிறப்பாக எடுத்துரைப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், நாட்டின் ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“‘இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்’ என்ற தலைப்பிலான முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதை வெளியீட்டு விழாவில்  பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது.  இப்புத்தகம் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான வலிமைகளையும், திறன்களையும் பிரதிபலிக்கிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298152&reg=3&lang=1

*** 

SS/IR/SU/SH