பி.எம்.இந்தியா
தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் மகளிருக்கான போல் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். இந்த வெற்றியை இந்தியாவுக்கான ஒரு சிறப்பான எழுச்சி என்றும் தனிச் சிறப்பு வாய்ந்த பதக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல இளம் விளையாட்டு வீரர்களை இந்த விளையாட்டில் ஈடுபடத் தூண்டும் ஒரு பெருமைக்குரிய சாதனை என்றும் இதனை பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“இந்தியாவுக்கு ஒரு சிறப்பான எழுச்சி மற்றும் தனிச் சிறப்பு வாய்ந்த பதக்கம்!
தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் மகளிருக்கான போல் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, மேலும் பல இளம் விளையாட்டு வீரர்களை இத்துறையில் ஈடுபடத் தூண்டும் ஒரு பெருமைக்குரிய சாதனையாகும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315158®=3&lang=1
****
SS/BR/SH