பி.எம்.இந்தியா
கொல்கத்தாவில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கொல்கத்தாவில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது:
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301110®=3&lang=1
—–
SS/ SV/SH
Extremely pained to learn about the loss of lives due to a fire mishap in Kolkata. My condolences to those who have lost their loved ones in this tragedy. May the injured recover at the earliest. The local administration is assisting those who are affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 19, 2026
কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত । এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে: প্রধানমন্ত্রী @narendramodi
— PMO India (@PMOIndia) August 19, 2026