Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் சில பதிவுகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

தில்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் சில பதிவுகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் உள்ள எண்: 7 லோக் கல்யான் மார்க் என்ற முகவரியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் சில முக்கியப் பதிவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பண்டிகை மக்களிடையே பாசத்தையும், நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டுமென்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எகஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டிருப்பதாவது:

தில்லியில் உள்ள எண்.7 லோக் கல்யான் மார்க் இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சில பகுதிகள் என்றென்றும் மறக்க முடியாத தருணங்கள்.

இந்தப் பண்டிகை பாசத்தையும், நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தட்டும்.

இது, அனைவருக்கும்  மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304131&reg=3&lang=1

***

SS/SV/PS/RJ