Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கண்ணியம், கருணை ஆகிய பண்புகளின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், ஆன்மீகத் தலைவராகவும், சிந்தனையாளராகவும், திகழ்ந்தவர் ஸ்ரீ நாராயண குரு என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், ஆன்மீகத் தலைவராகவும், சிந்தனையாளராகவும் விளங்கிய ஸ்ரீ நாராயண குரு கண்ணியம், கருணை ஆகிய பண்புகளின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்க தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களுக்கு மனவலிமை அளிப்பதுடன் கல்வி, கற்றல் மீதான அவரது கவனமும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

***

(Release ID: 2304121)

SS/SV/PS/RJ