Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்துஅர்ப்பணித்தார் அப்போது உரையாற்றிய அவர் இப்பெரும் விழாவில் நேரடியாகவும் இணைவழியாகவும் பங்கேற்றுள்ளவர்களை வரவேற்பதாகக் கூறினார்குஜராத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை தாம் வரவேற்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.

மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழக மைதானத்தில் நிலவிய உற்சாகமிக்க சூழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர்பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வளர்ச்சிக் கொண்டாட்டத்திற்கான ஒன்றுகூட உள்ளதன் சிறப்பம்சத்தைப் பாராட்டினார்.

நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்தன்னை வரவேற்பதற்காக வதோதரா மக்கள் ஏற்பாடு செய்திருந்தச் சிறப்பான தூய்மைப் பணிகளைப் பாராட்டினார்இந்த வளர்ச்சிக் கொண்டாடத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய மகத்தான சேவை மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்குப் பிந்தைய விரைவான முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர்வர்த்தக சூழலை அடிப்படை அளவில் மாற்றும் கிழக்குமேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத் திட்டங்களை வெற்றிகரமான செயல்பாட்டைப் பாராட்டினார். 2,800 கிலோ மீட்டர் வழித்தடப் பணிகளை நிறைவு செய்து செயல்வடிவத்தில் நிரூபித்துக்காட்டியுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.

பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை தனியே பிரிப்பதன் மூலம் நாள்தோறும் 430-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்குவது குறித்துக் குறிப்பிட்டார்அத்துடன் லாரிகள் மூலமான 30 மணி நேர பயணம் வெறும் 10 முதல் 12 மணி நேரமாக குறைந்துள்ளதையும் அவர் விளக்கினார். 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு முன்பை விட தற்போது பாதிக்கும் குறைவான நேரமே ஆவதாகவும் இதனால் எரிபொருள் சேமிக்கப்பட்டுசரக்கு கட்டணம் குறைந்துச் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாக அவர் கூறினார்ஒரே வழித்தடத்தில்  மேற்கொள்ளப்பட்ட முதலீடு பல்வேறு நன்மைகளை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்பு மூலம் கிடைக்கக்கூடிய மகத்தான வேளாண் நன்மைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர் நாட்டின் கிழக்குமேற்குப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களைப் பெரிய சந்தைகளுக்கு விரைவாக எடுத்துச் செல்ல முடிவது குறித்துக் குறிப்பிட்டார்பருவகால மலர்கள்காய்கறிகள்பழங்கள் போன்ற எளிதில் சேதமடையக்கூடிய பொருட்கள்நுகர்வோர் மற்றும் சந்தைகளை உரிய நேரத்தில் சென்றடைவதுக் குறித்து கூறினார்இது விவசாயிகளுக்கு பெரும் பயனளிப்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.

இன்று தொடங்கிவைக்கப்பட்ட ரயில் சேவை சோட்டா உதய்பூர், அலிராஜ்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார். பல தசாப்தங்களாகப் பிறகு இப்பகுதிக்கு ரயில் தற்போதுச் செல்வதாக திரு மோடி குறிப்பிட்டார்.  மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு ரூ 2.75 லட்சம் கோடிக்கும் மேலான மதிப்புடைய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் முக்கிய எந்திரமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307800&reg=3&lang=1

                                                           ***

TV/IR/SM/RJ