Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செமிகான் இந்தியா 2026 மாநாட்டைப் பிரதமர் செப்டம்பர் 17 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி செமிகான் இந்தியா 2026 மாநாட்டை 2026 செப்டம்பர் 17 அன்று புதுதில்லி யசோ பூமியில் காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்குக் கூடியிருப்பவர்களிடையே உரையாற்ற உள்ளார்.

2026 செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது. இது செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையைச் சேர்ந்த உலகளாவிய, இந்திய நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், மூதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும். இம்மாநாடு இந்தியாவில் ஒருங்கிணைப்பு, முதலீடு, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இதன் இணை அமர்வுகளில் காட்சித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஒத்துழைப்பு, கூட்டு முயற்சிகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 6 நாடுகளின் வட்டமேசை மாநாடுகள், மகளிர் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கம் உள்ளிட்டவை இடம் பெறும்.

இம்மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அத்துடன் 52 நாடுகளின் பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310726&reg=3&lang=1

***

PD/IR/GS/RJ