Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தரம்வீர் சௌத்ரி, டி.எஸ்.மனு, ஜெய் குமார், டி.கே. விஷால் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தரம்வீர் சௌத்ரி, டி.எஸ்.மனு, ஜெய் குமார், டி.கே. விஷால் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து, அணி பதக்கத்தை வென்றதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

வீரர்களின் வெற்றி வருங்காலத்தில் தடகள விளையாட்டுகளின் புகழுக்கு பங்களிக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:

“உண்மையிலேயே இது அற்புதமான சாதனை!

ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சாதனை நேரத்தில்  வெண்கலப் பதக்கம் வென்ற தரம்வீர் சௌத்ரி, டி.எஸ்.மனு, ஜெய் குமார், டி.கே. விஷால் ஆகியோருக்கு வாழ்த்துகள். இவர்களின் வெற்றி, வருங்காலத்தில் தடகள விளையாட்டுகளின் புகழுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கட்டும்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316754&reg=3&lang=1

****

TV/BR/SH