பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்ஃ வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குல்வீர் சிங்கிற்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், பதக்க மேடையில் இடம்பெறும் வாய்ப்பை அவர் தொடர்ந்து மூன்று முறை பெற்றிருப்பதை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக வர்ணித்தார்.
அவரது சீரான செயல்பாடு, சகிப்புத்தன்மை, மன உறுதி ஆகியவற்றைப் பாராட்டிய திரு மோடி, எதிர்காலத்தில் அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“குல்வீர் சிங்கிற்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளன!
ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். பதக்க மேடையில் அவர் தொடர்ந்து மூன்று முறை இடம்பிடித்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது சீரான செயல்பாடு, கடின பயிற்சி, மன உறுதி ஆகியவை பாராட்டுக்குரியவை. இனிவரும் காலங்களிலும் அவர் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316750®=3&lang=1
****
TV/BR/SH