பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தப் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இது என்றும், இது ஒரு மறக்க முடியாத சாதனை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
பூஜாவின் எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்திய தடகளத்திற்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்கு வாழ்த்துகள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தப் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத சாதனை. அவரது வரவிருக்கும் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”
(Release ID : 2316753)
****
TV/PLM/SH