Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரணவி சரத் அர்ஸுக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பிரணவி சரத் அர்ஸுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சிறப்பான ஆட்டம், விளையாட்டு பிரிவில் தேசத்திற்கு நினைவில் நிற்கும் ஒரு  தருணத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வெற்றி, மேலும் பல இளம் இந்தியர்களை விளையாட்டுத் துறைக்கு ஈர்த்து, உச்சத்தை அடைய அவர்களை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரணவி ஷரத் அர்ஸுக்கு திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பிரணவி சரத் அர்ஸுக்கு வாழ்த்துகள். அவரது சிறப்பான ஆட்டம், தேசத்திற்கு நினைவில் நிற்கும் ஒரு விளையாட்டுத் தருணத்தை வழங்கியுள்ளது. இந்த வெற்றி, மேலும் பல இளம் இந்தியர்களை இந்த விளையாட்டின்பால் ஈர்த்து, உச்சத்தை அடைய அவர்களை ஊக்குவிக்கட்டும். பிரணவிக்கு வாழ்த்துகள். சிறப்பாக விளையாடியதற்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

****

TV/PLM/RJ