பெற்றோரை மதித்து, அவர்களைப் போற்றுவது ஒவ்வொருவரின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழி ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நற்பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களும், உண்மை, நேர்மை ஆகிய அறநெறிகளில் உறுதியாக இருப்பவர்களும், தங்களது பெற்றோரை மிகுந்த அக்கறையுடன் வணங்கி மதித்துப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு உரிய மரியாதை அளிப்பது, அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது ஆகியவை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் என்பதை அந்த சமஸ்கிருத நீதிமொழி எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338937®=3&lang=1
***
TV/PLM/SU
तपःशौचवता नित्यं सत्यधर्मरतेन च। मातापित्रोरहरहः पूजनं कार्यमञ्जसा॥ https://t.co/PPMrlKHVkE
— Narendra Modi (@narendramodi) November 20, 2026