Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தாவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்


கொல்கத்தாவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேற்கு வங்க அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,  “கொல்கத்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

(Release ID : 2324835)

SK/PLM/RJ