Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மார்பியின் ராஜமாதா விஜய்குன்வர்பாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


மார்பியின் ராஜமாதா விஜய்குன்வர்பாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது ஆளுமை, சேவை மனப்பான்மை, மார்பி மக்களுடனான நெருங்கிய பிணைப்பு ஆகியவை எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் பெற்றிடவும் திரு. நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324810&reg=48&lang=1  

***

TV/RB/RJ