Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடங்குவதையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய அணிக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நமது பாரா விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்றும், அவர்களின் மனவுறுதி, அர்ப்பணிப்பு, உறுதியான மனநிலை ஆகியவை 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டி இருப்பதுடன், மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு கூறி, அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடங்குவதையொட்டி, இந்திய அணிக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது அற்புதமான பாரா விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் மனவுறுதி, அர்ப்பணிப்பு, உறுதியான மனநிலை ஆகியவை 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

அவர்கள் நம்பிக்கையுடன் போட்டிகளில் பங்கேற்று, மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கட்டும்”

****

(Release ID: 2324916)

TV/PLM/RJ