Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்வாதி செளத்ரிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தை டபிள்யு1 பிரிவில் முதன்முறையாக களமிறங்கி வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்வாதி செளத்ரிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இப்பிரிவில் இது இந்தியாவிற்கு முதல் பதக்கமாகும். 

இது அவருடைய மிகச் சிறப்பான சாதனை என்றும், அவருடைய அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது என்றும், நாட்டை தொடர்ந்து பெருமிதம் அடையச் செய்வார் என்று தான் நம்புவதாகவும், திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

“இந்திய பாரா வில்வித்தைப் போட்டியில் ஒரு மிகச் சிறப்பான சாதனை.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தை டபிள்யு1 பிரிவில் ஸ்வாதி செளத்ரி முதன்முறையாக களமிறங்கி வெள்ளிப்பதக்கம் மூலம், இந்தியாவிற்கு இப்பிரிவில் முதலாவது பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

அவருடைய அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது, அவர் நாட்டை தொடர்ந்து பெருமிதம் அடையச் செய்யட்டும்.”

(Release ID: 2326686)

****

SK/IR/RJ/SH