2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி42/டி63 பிரிவில், சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்ற ராகுலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட திரு மோடி, வரும் காலங்களிலும் ராகுல் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ராகுலுக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம்! ஆடவர் உயரம் தாண்டுதல் டி42/டி63 பிரிவில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து புதிய உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326797®=3&lang=1
****
TV/BR/SH
A proud moment for Rahul at the Asian Para Games 2026! He has secured the Bronze Medal in the Men's High Jump T42/T63 event with a fine jump. May he continue to reach new heights in the times to come: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026