ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் கிருஷ்ணா நாகருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
அவர்களின் அர்ப்பணிப்பு இந்திய பாரா பேட்மிண்டனுக்கு மீண்டும் ஒரு பெருமைமிக்க தருணத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சுமதி சிவன் – கிருஷ்ணா நாகருக்கு வாழ்த்துகள்! இவர்களின் அர்ப்பணிப்பு இந்திய பாரா பேட்மிண்டனுக்கு மீண்டும் ஒரு பெருமைமிக்க தருணத்தைக் கொண்டு வந்துள்ளது. வரும் போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326731®=3&lang=1
(Release ID: 2326731)
****
TV/SV/SH
Congratulations to Nithya Sre Sumathy Sivan and Krishna Nagar on winning the Bronze Medal in the Mixed Doubles SH6 Para Badminton event at the Asian Para Games 2026! Their dedication has brought another proud moment for Indian Para Badminton. Wishing them continued success in the competitions ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026