பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (23.10.2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சின்மயா அமிர்தப் பெருவிழா உலகளாவிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சின்மயா மிஷன் என்பது வெறும் நிறுவனம் மட்டுமல்ல எனவும் அது பல ஆண்டுகால புனித தீர்மானங்களால் இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.
சுவாமி சின்மயானந்தரை 1993-ம் ஆண்டில் வதோதராவில் தாம் சந்தித்ததைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது அவருடன் இளைஞர் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் உணர்வும் விவேகமும் அழியாதவை என்பதால், அது பல்லாயிரம் ஆண்டுகளாக அறிவையும் ஞானத்தையும் தேடும் நாடாக நிலைத்திருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். சுவாமி சின்மயானந்தர் ஆன்மீகத்தைப் பற்றி எவ்வளவு தீவிரமாகப் பேசினாரோ, அதே அளவு தேசிய முன்னுரிமைகள் குறித்தும் பேசினார் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். தேசமே நமது கலாச்சாரம், வாழ்வின் அடையாளம் என்பதால், ஆன்மீக வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று அவர் போதித்தார் என பிரதமர் தெரிவித்தார்.
2015-ம் ஆண்டு சின்மயானந்தரின் நூற்றாண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை நினைவு கூர்ந்த பிரதமர், சுவாமிஜியின் வாழ்க்கையானது ஞானம், கர்மம், பக்தி ஆகியவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க சங்கமமாக இருந்தது என்றார்.
சின்மயா மிஷனால் நிறுவப்பட்ட விரிவான கல்வி கட்டமைப்பைப் பிரதமர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சின்மயா கல்வி நிறுவனங்கள் தற்போது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வருவதாக அவர் கூறினார். இந்த நிறுவனங்களில் மாணவர்கள் நவீன கல்வியைப் பெறுவதோடு, இந்திய விழுமியங்களையும் கற்றுக்கொள்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சுவாமிஜியின் வாழ்நாள் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த பிரதமர், கன்னியாகுமரியில் கடலில் விவேகானந்தர் பாறை நினைவகத்தைக் கட்ட வேண்டும் என்ற ஏக்நாத் ரானடேயின் தீர்மானத்திற்கு சுவாமிஜி உறுதுணையாக நின்று, அத்திட்டத்திற்கான முதல் நிதிப் பங்களிப்பை வழங்கியதை நினைவு கூர்ந்தார். அந்த நினைவுச்சின்னம் இப்போது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சின்மயா மிஷனின் நூற்றாண்டுப் பயணமும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணமும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்லும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327280®=3&lang=1&_gl=1
***
SS/PLM/RJ
Delighted to join the Chinmaya Amrit Mahotsav Global Sammelan. The Chinmaya Mission has spent decades serving communities and sharing India's spiritual wisdom with the world. https://t.co/gvALnWbo91
— Narendra Modi (@narendramodi) October 23, 2026
चिन्मय मिशन केवल एक संस्था नहीं है। ये एक चिन्मय विचार है... जिसकी स्थापना एक चिन्मय ऋषि ने की थी... इतने दशकों की इसकी यात्रा भी, चिन्मय संकल्पों से भरी रही है। और, जो चिन्मय है... वो स्वाभाविक ही अमर है, अमृतमय है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026
हमारा राष्ट्र ही हमारी संस्कृति की जन्मभूमि है। ये राष्ट्र ही हमारे अस्तित्व का आधार है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026
चिन्मय मिशन के प्रयासों से आज लाखों युवा ऐसे हैं... जो भारत के सांस्कृतिक brand ambassador का काम कर रहे हैं। ये युवा भारतीय मूल्यों को नई पीढ़ी तक पहुंचा रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026