சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.10.2026) பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சாதனை அளவாக 114 பதக்கங்களை வென்றது, இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் ஒவ்வொரு உறுப்பினரின் அசாதாரணமான உறுதிப்பாட்டிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பங்களித்துள்ளனர் என்றும், தங்களது சாதனைகளால் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது பாரா விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தியது மகத்தான சாதனை!
சாதனை அளவாக 114 பதக்கங்களை வென்றது, இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு தருணம்!
நமது இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரின் அபாரமான உறுதிப்பாட்டிற்கும் எனது வாழ்த்துகள்.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்குப் பங்களித்துள்ளதோடு, தங்களது சாதனைகளால் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.”
****
(Release ID: 2328126)
AD/PLM/RJ
What an extraordinary achievement by our para-athletes at the just concluded Asian Para Games 2026! With a record 114 medals, this marks India’s best-ever performance at the Games. This is an occasion of immense pride and joy for the entire nation! I congratulate every member of our contingent for their exceptional determination. Each athlete has contributed to this historic achievement and inspired countless Indians with their accomplishments.
— Narendra Modi (@narendramodi) October 25, 2026