Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்


இந்தியாவின் இரும்பு மனிதரும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

வலிமையான, வளமான, திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காகச் சர்தார் படேல் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டுள்ள  பிரதமர், வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் முயற்சியில், அவரது வாழ்க்கை இன்றும் ஒரு சிறந்த உத்வேகம் அளிக்கும் சக்தியாகத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்தார்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330739®=3&lang=1

(Release ID: 2330739)

****

SS/SV/SH