Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவைப் பெறுவதில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்


அறிவைப் பெறுவதில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நம்பிக்கையுள்ளவர்களும், அறிவைப் பெறுவதில் உறுதியுடன் உள்ளோரும் தங்களுடைய புலன்களை கட்டுக்குள் வைத்திருப்போரும் உண்மையான ஞானத்தை அடைவதாக இந்த நீதிமொழி சுட்டிக்காட்டுகிறது. ஞானத்தை அடைவது அமைதியைத் தருகிறது. நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சுயக் கட்டுப்பாட்டுடன் அடையக்கூடிய அறிவு ஒருவருடைய அமைதிக்கும், ஆன்மீக மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற செய்தியை உறுதிப்படுத்துகிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337270&reg=3&lang=1

***

VJ/PD/IR/LDN/GS