பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் செர்பியா இடையே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.