Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் திரு. சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.

கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள மகாதாயி ஆற்று நீர் பிரச்சினைக்கு நடுவர் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு தீர்வு காண பிரதமரின் குறுக்கீட்டை கோரியது. தற்போது இந்தப் பிரச்சினை நடுவர் நீதிமன்றத்திலும் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிடையே இது குறித்த ஒருமித்த கருத்து தேவை என்று பிரதமர் அப்போது ஆலோசனை கூறினார். நடுவர் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இது அவசியம் என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் குறிப்பாக அதன் வடக்குப் பகுதியில் வறட்சி நிலை காணப்படுவதாக குழு உறுப்பினர்கள் அப்போது தெரிவித்தனர். இது குறித்து ஆராய மத்திய அரசின் குழு ஒன்று அங்கு சென்று நிலைமையை ஆராயும் என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.

சர்க்கரையின் விலை வீழ்ச்சி அடைந்ததையடுத்து, கரும்பு பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளை இக்குழு எடுத்துக் கூறியது. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்சினை இருப்பதாகவும், அதை தீர்ப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மல்பரி பயிரிடுவோரை பாதுகாக்க, இறக்குமதி செய்யப்படும் பட்டு இழைக்கு 30 சதவீத இறக்குமதி தீர்வையை உயர்த்த வேண்டும் என்று இக்குழு பிரதமரை கேட்டுக் கொண்டது. இது குறித்து ஆவன செய்வதாக பிரதமர் அப்போது உறுதியளித்தார்.

மத்திய அமைச்சர்கள் திரு. வெங்கையா நாயுடு, திரு. அனந்தகுமார், திரு. சதானந்த கவுடா, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.

•••••••