பி.எம்.இந்தியா
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி திங்கட் கிழமை ஆய்வு செய்தார். கடந்த ஏப்ரல் மாத கடைசி வாரம் இணைப்புத் தொடர்பான உள்கட்டமைப்புத் துறைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றதுடன் இந்தக் கூட்டத்தில் பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் இந்திய அரசின் அனைத்து உள்கட்டமைப்புத் அமைச்சகங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அளித்த விளக்கத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, குறைந்த விலையிலான கிராமப்புற வீட்டுவசதி, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் இதுவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 1.98 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. முதல்கட்ட எரிசக்தி கலவையில் எரிவாயுவின் பங்களிப்பு 8% ஆக அதிகரித்துள்ளது. நகர எரிவாயு விநியோக கட்டமைப்பின் கீழ் 81 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையில் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் எத்தனால் கலப்பு மற்றும் நுணுக்கங்களில் முற்போக்கான மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க பிரதமர் அழைப்பு விடுத்தார். இதற்கு வேளாண் கழிவுகளை பயன்படுத்தும் வகையில் 2 வது தலைமுறை எத்தனால் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கிராமப்புற மின்மயமாக்கும் திட்டம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1000 நாட்களுக்குள் செய்துமுடிக்கும் வகையில் மொத்தமுள்ள 18,452 கிராமங்களில் இதுவரை 13,000 கிராமங்களில் அளிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2019-17 ல் 22 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புறங்களில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டிருப்பதுடன், இதே காலக்கட்டத்தில் 40 கோடி எல்.இ.டி. விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிராந்தியங்களுக்கு இடையிலான மொத்த மின் விநியோகத் திறன் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2014 மே முதல் 2017 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் மின் விநியோக திறன் 41 கிகா வாட் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மொத்த உற்பத்தித் திறன் 57 கிகா வாட் அளவை விஞ்சி, கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டதை விட 24.5% அதிகரித்துள்ளது. 2017 நிதியாண்டில் சூரிய மின் உற்பத்தி திறன் இதுவரை இல்லாத அளவுக்கு 81% அதிகரித்துள்ளது. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி கட்டணங்கள் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 4 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. நகரம் ஒன்றின் மின்சார தேவையை சூரிய மின்சக்தி மூலம் மட்டுமே நிறைவேற்றக்கூடிய மாதிரி சூரிய மின்சக்தி நகரங்களை உருவாக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்தார். இதே முயற்சியின் மூலம் சில பகுதிகளை மண்ணெண்ணை இல்லாதவையாகவும் ஆக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஊக்கமளிக்கவும் புதுப்பிக்கத்த்க்க எரிசக்தி இயக்கத்தின் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெறவும் சூரிய மின்சக்தி கருவிகளை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குறிப்பிட்த்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அடிப்படையிலான பயன்பாடுகள் தீவிரமாக பயன்படுத்தப்பட்டு இந்தத் திட்டத்தின் முன்னேற்றங்கள் கண்காணிக்கப்படுகின்றன. 2017 நிதியாண்டில் 32 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் கிராமப்புற கட்டிடத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.v
மின்மயமாக்கம், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று குறிப்பிட்ட பிரதமர் ஒவ்வொன்றிலும் மோசமாக செயல்பட்டும் 100 மாவட்டங்களில் கண்ணோட்டம் சார்ந்த அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். எதிர்கால ஆய்வுகளில் மாவட்ட அளவிலான பிரச்சினைகளின் மீது கண்ணோட்டம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் மோசமாக செயல்படும் மாவட்டங்களின் மீது சிறந்த கண்காணிப்பை செலுத்தமுடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
****
Reviewed progress of key infra sectors including petroleum and natural gas, power, renewable energy and housing. https://t.co/YM5Rkj0QzK
— Narendra Modi (@narendramodi) May 9, 2017
Progress in sectors including renewable energy, rural housing, LED bulbs is gladdening. Over 2 crore people benefited from Ujjwala Yojana.
— Narendra Modi (@narendramodi) May 9, 2017
Called for greater emphasis on ethanol blending & expediting the setting up of 2nd generation bio ethanol refineries.
— Narendra Modi (@narendramodi) May 9, 2017
You would be happy to know that capacity addition in solar energy in FY17 stands at the highest-ever, at 81%.
— Narendra Modi (@narendramodi) May 9, 2017
Our focus is on boosting solar equipment manufacturing. The energy sector will gain & employment opportunities will also increase.
— Narendra Modi (@narendramodi) May 9, 2017
We also decided that in future review meetings, apart from sectoral progress we will also review district wise progress in key areas.
— Narendra Modi (@narendramodi) May 9, 2017