Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் அமெரிக்க நிதி அமைச்சர் சந்திப்பு


s2015021262170 [ PM India 176KB ]

s2015021262171 [ PM India 148KB ]

s2015021262172 [ PM India 153KB ]

அமெரிக்க நிதி அமைச்சர் திரு. ஜேகப் லீ இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். புது தில்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி துணை தலைவர் திரு. ஸ்டான்லி பிஷர் உடன் இருந்தார். இந்திய-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் நிதி கூட்டுறவு பற்றிய பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை மத்திய நிதி அமைச்சர் இணைத் தலைவராக இருந்து வழிடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் குடியரசு தின விழா அணிவகுப்பில் அமெரிக்கா அதிபர் கலந்திகொண்டு சிறப்பித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா அமெரிக்கா இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டுறவிற்கு முக்கிய தூண் என்று பிரதமர் வலியுறுத்தினார். எதிர்பார்க்கக்கூடிய மற்றும் நிலையான வரிவிதிப்பு மற்றும் கொள்கைகள் வழங்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ள அமெரிக்க நிறுவனங்களின் எண்ணங்களை அவர் வரவேற்றார்.

இந்தியாவின் முக்கிய பொருளாதாரத்தில் 100 மில்லியன் மக்களை இணைத்த “பிரதமர் மக்கள் நிதி திட்டம்” முயற்சியை அமெரிக்க நிதி அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரச்னையைத் தீர்க்க இந்திய அரசு எடுத்துள்ள முயற்சியையும் அவர் பாராட்டினார்.