பி.எம்.இந்தியா
கஜகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை கீழ்க்கண்டவாறு.
“நான், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜூன் 8-9 ஆகிய தேதிகளில் கஜகிஸ்தானில் உள்ள ஆஸ்தானாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன்,
இக்கூட்டத்தில், நடைமுறைகள் முடிவடைந்தவுடன், இந்தியா எஸ்.சி.ஓ.வின் முழு நேர உறுப்பினராகும். அதன் மூலம் எஸ்.சி.ஓ. 40% மனிதவளத்திற்கும், சுமார் 20% உலகளாவிய ஒட்டுமொத்த பொருட்கள் உற்பத்திக்கும், பிரதிநிதிப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு தாஷ்கண்ட்டில் நடைபெற்ற கூட்டத்திலேயே நாம் முழுநேர உறுப்பினராக ஆவதற்கான நடைமுறைகளை துவக்கினோம். நான் எஸ்.சி.ஓ. உடன் இந்தியாவின் உறவை ஆழமாக எதிர்நோக்குகிறேன். இது நமது பொருளாதாரம், தொடர்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டுறவு உள்ளிட்ட பிறவற்றுக்கும் உதவும்.
நாம் எஸ்.சி.ஓ. உறுப்பினர்களுடன் நீண்ட கால உறவுகளை கொண்டுள்ளோம். அதனை மேலும் எஸ்.சி.ஓ. மூலம் முன்னெடுத்து செல்வது, நமது நாடுகள் மற்றும் நமது மக்களின் பரஸ்பர நன்மைக்கும் மற்றும் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ஒன்றாக இணைந்து, நமது முயற்சிகளை மேலும் அதிகரித்து, நமது முழு திறனையும் உணர்ந்துகொள்ளும் வழிகளில் வரக்கூடிய பொதுவான சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில், நன்மையளிக்கும் வகையிலான புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம்.
மேலும், ஜூன் 9 அன்று மாலை, நான் “எதிர்கால எரிசக்தி” என்ற தலைப்பில் நடைபெறும் ஆஸ்தானா பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்துக் கொள்கிறேன்”.”
****
Will join the SCO Summit in Astana. Here are more details. https://t.co/wgoxLH8b5e
— Narendra Modi (@narendramodi) June 7, 2017