Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெளிநாடுகளில் முக்கியமான கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் சலுகை வழங்க உத்தேசம்


வெளிநாடுகளில் முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் மூலம் நிதியை சலுகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த கடனை திருப்பி அளிக்க அயல்நாட்டு அரசு உறுதியளிக்கும். இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்க குழு ஒன்று முடிவு செய்யும். இந்தக் குழுவில் நிதி அமைச்சகத்தின் செலவுகளுக்கான துறை, வெளிவிவகார அமைச்சகம், தொழில் மேம்பாட்டு அமைச்சகம், வர்த்தகத்துறை, நிதிச்சேவை துறை, உள்துறை அமைச்சகம், ஆகியவற்றின் உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும் உறுப்பினராக இருப்பார். திட்டம் துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு இக்குழுவிற்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்படும். திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகையின் செலவு குறித்து இக்குழு மேற்பார்வையிடும். ஏற்றுமதி இறக்குமதி வங்கியோடு அதே விதிமுறைகளின்படி மற்ற பொதுத்துறை வங்கிகளும் இத்திட்டங்களுக்கு உதவி நிதியுதவி அளிக்க இக்குழு ஆலோசனை அளிக்கும். ஒப்பந்தங்கள் மூலம் எடுக்கப்படும் திட்டப்பணிகளுக்கு தேவையான நிதியுதவியில் 75 சதவீத நிதியை இந்தியாவிலிருந்து அளிக்க குழு வலியுறுத்தும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தின் அனுபவங்கள் பற்றி மதிப்பீடு செய்யப்படும்.

பின்னணி:

இந்தியாவில் கட்டமைப்பு திட்டப்பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் நல்ல புகழ் பெற்றுள்ளன. ஆயினும் அவர்கள் வெளிநாடுகளில் ஒப்பந்தங்களை பெறமுடியாத நிலை உள்ளது. ஏனெனில், இந்தியாவில் அதற்கு அதிக அளவு நிதி தேவை. ஆகவே, அதுபோன்ற இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை வெளிநாடுகளில் பெறவும் இந்திய நிறுவனங்கள் அத்திட்டங்களை நிறைவேற்றவேண்டியது அவசியம் என்பது தற்போது உணரப்பட்டுள்ளது.

•••••••