Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா அமெரிக்கா இடையே உள்நாட்டு பாதுகாப்புகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா இடையே உள்நாட்டு பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா அமெரிக்கா இடையே இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த வகை செய்யும். இருநாடுகளுக்கு இடையே உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட உள்ள ஆறு துணைக்குழுக்கள் இடையே ஒருங்கிணைப்பையும், கலந்தாய்வையும் மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.

*****