Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்; ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சரிடம் உரையாடினார்; தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் திரு. என். என். வோஹ்ரா மற்றும் முதல் அமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடிய பிரதமர் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

“இது போன்று வெறுப்பூட்டும் செயல்களுக்கும் கோழைத்தனமான தாக்குதலுக்கும் இந்தியா என்றும் அடிபணியாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தனது அன்புக்கு உரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையை பிரார்த்தனை செய்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியை அளித்துள்ளது. இந்த கொடூர செயலுக்கு அனைவருமே கடும் கண்டனம் தெரிவிப்பர்.

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***