பி.எம்.இந்தியா
மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான உலகளாவிய முனைப்பு – “சம்வாத்” இரண்டாம் பதிப்பு யான்கூனில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இந்த உயரிய மாநாட்டின் முதல் பதிப்பு விவேகானந்த கேந்திராவால் புதுதில்லியில் 2015, செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. பல்வேறு மதம் மற்றும் பாரம்பரியங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற அம்மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.
சம்வாதின் இரண்டாவது பதிப்பிற்கான காணொளி செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள் இன்று பல்வேறு கேள்விகளை எதிர்நோக்கியுள்ளன, அவை யாவன:
எவ்வாறு மோதலை தவிர்ப்பது?
பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
எவ்வாறு அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து நமது உயிரை பாதுகாப்பது?
இதற்கான பதில்கள், பல்வகை மதங்கள், நாகரிகங்கள் மற்றும் பல்வகை சமய உற்றுகளில் வேரூண்றிய நல்லிணக்கத்தின் நீண்ட கால சிந்தனையில் தோன்றுவது இயற்கையானது என அவர் தெரிவித்தார்.
“கடினமான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண இயலும் என உறுதியாக நம்பும் பண்டைய இந்திய பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்டவன் நான்” என்று பிரதமர் கூறியுள்ளார். கருத்து பரிமாற்றம் மற்றும் மோதல் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் பண்டைய இந்திய அணுகுமுறையான “தர்க சாஸ்திர”த்தில் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடவுள் இராமர், கடவுள் கிருஷ்ணர், கடவுள் புத்தர் மற்றும் பக்த பிரகலாதர் போன்றறோரை இந்திய இதிகாசங்களிலிருந்து எடுத்துக்காட்டிய பிரதமர், அவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடும் தர்மத்தை உயர்த்திபிடிப்பதே நோக்கமாக இருந்ததாகவும் அதுவே பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இந்தியர்களிடம் நிலைத்துள்ளது என்றார். நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட விதைகளை தூவியும், உலகில் உள்ள சமூகத்திரை பிரிக்கும் ஆழமாக வேரூன்றிய மதரீதியான வழிகாட்டுதல்களை அறுப்பதற்கு “சம்வாத்” அல்லது “பேச்சுவார்த்தை” ஒன்றே வழி என பிரதமர் தெரிவித்தார்.
மனிதன் இயற்கை போற்றி காக்கவில்லையெனில், இயற்கை பருவநிலை மாற்றம் என்ற உருவில் வெளிபடுத்தும். எந்த நவீன சமூகத்திற்கும் தேவையான சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், இயற்கைக்கு குறைவான பாதுகாப்பையே அளித்துள்ளது என்பதால் “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நல்லிணக்க”த்திற்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
மனிதன் இயற்கையை வெறும் சுரண்டுவதற்கான வளஆதாரமாக மட்டும் கருதாமல், இயற்கையுடன் தொடர்புபடுத்திக் கொண்டும், இயற்கை வணங்கவும் வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
“ஒன்றுடன்ஒன்று தொடர்புக்கொண்டும், ஒன்றை ஒன்று சார்ந்துள்ள 21-ம் நூற்றாண்டின் உலகம், பயங்கரவாதம் முதல் பருவநிலை மாற்றம் வரையிலான பல உலகளாவிய சவால்களை எதிர்த்து போரிட்டு வருகிறது எனவும், ஆசியாவின் பழைய பாரம்பரியமான பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்வுகளை காண இயலும்” என நான் நம்புகிறேன்.
******
Shared my message for the 2nd edition of 'Samvad- Global Initiative on Conflict Avoidance and Environment Consciousness', held in Yangon.
— Narendra Modi (@narendramodi) August 5, 2017
Talked about issues such as avoiding conflicts, addressing climate change and furthering peace.
— Narendra Modi (@narendramodi) August 5, 2017
Asia’s oldest traditions of dialogue and debate can give the answers to several global challenges such as terrorism and climate change.
— Narendra Modi (@narendramodi) August 5, 2017
‘Samvad’ or dialogue is the only way to overcome prejudices, divisions & conflicts. Here is my message. https://t.co/ypeQH1irPZ
— Narendra Modi (@narendramodi) August 5, 2017