பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜமுந்திரி விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலத்தை, ஆந்திரப் பிரதேச மாநில அரசு வழங்கும் அதே அளவு நிலத்துக்கு இணையாக பரிமாறிக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராஜமுந்திரி விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எளிதில் சென்றுவருவதற்கு வசதியை செய்துகொடுக்கும் வகையில், சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பரிந்துரையின் மூலம், சாலை இணைப்பு வசதி ஏற்படும். இதன்மூலம், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாக சென்றுவர முடியும். குறிப்பாக, விவசாயிகள், தங்களது விளைநிலங்களுக்கு செல்ல வசதி ஏற்படும்.