பி.எம்.இந்தியா
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நீர் வளங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
இரு நாடுகளும் தங்களது நிபுணத்துவம், தங்களது சட்டங்கள் ஆகிய வரையறைக்கு உட்பட்டு, நீர் வளங்களை மேம்படுத்துவது, கையாள்வது தொடர்பான துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதற்கும் வழியமைக்கும். இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான களங்கள் வருமாறு:
இந்த ஒத்துழைப்பில் இடம்பெறும் சில அம்சங்கள்:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு கூட்டுச் செயல்பாட்டுக் குழுவை (Joint Working Group – JWG) அமைப்பதற்கு வகை செய்கிறது. அதில் இரு நாடுகளிலிருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இடம்பெறுவர். இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செயல்படுவதை இவர்கள் கண்காணிப்பர். இதற்கான பணிக்குழு ஆண்டுதோறும் இந்தியாவிலும் மொராக்கோவிலும் கூட்டங்களை மாறி மாறி நடத்தும். இப்பணிக்குழு இவை தவிர, எப்போது வேண்டுமானாலும் பரஸ்பரம் காணொலி மூலமாகவோ தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொள்ளும்.
அறிவியல், தொழில்நுட்ப, தொழில்நுணுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்த ஒத்துழைப்பு அமையும். இரு நாடுகளிலும் நீர் வளம் தொடர்பாக இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் இரு தரப்பு உறவுகளை ஏற்படுத்தி, மேம்படுத்த இந்த ஒத்துழைப்பு ஊக்குவிக்கும். இரு நாடுகளும் புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், தொழில்நுணுக்கங்கள் தொடர்பான தங்களது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும்போது இரு நாடுகளும் புதிய விஷயங்களை அறிந்து கொள்வதுடன், தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும்.
பின்னணி:
நீர் வளங்களின் மேம்பாடு, நீர் வளங்களைக் கையாளுதல் தொடர்பாக இதர நாடுகளுடன் இரு தரப்பு பரிமாற்றங்களுக்கு மத்திய நீர் வள, நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை நதி மேம்பாட்டு அமைச்சகம் வழியமைத்து வருகிறது. நீர் வளம் குறித்த கொள்கை, தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளுதல், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், அறிவியல் – தொழில்நுட்பக் கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துதல், வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் ஆய்வு சுற்றுலாக்களை நடத்துதல் ஆகியவை இந்த இரு தரப்பு பரிமாற்றத்தில் இடம்பெறுகின்றன.
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அமைந்து வரும் இச்சூழ்நிலையில், நீர் வளங்கள் தொடர்பான அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், மொராக்கோ நாட்டுடன் உடன்பாடு கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
****