Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா – பிரதமர் பங்கேற்பு


மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாடு நிறுவனத்தில் அக்டோபர் 15, 2015 அன்று நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் அங்கமாக, பிரதமர் டாக்டர் கலாமின் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு, “டாக்டர் கலாமின் வாழ்க்கையைக் கொண்டாடுவோம்” என்ற புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட உள்ளார். பின்னர் பிரதமர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாடு நிறுவனத்தில் உள்ள கோத்தாரி அரங்கில் உரையாற்ற உள்ளார்.

***