பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு தேதிய ஆடைகள் வடிவமைப்பு நிறுவனத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நிதியை பயன்படுத்துவதற்கான நேரத்தை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நீட்டிப்பின் மூலம் மீதமுள்ள ரூ.90.13 கோடி 31.3.2015 என்ற தேதிக்குள் செலவிடப்பட வேண்டிய நிதியை மார்ச் 2017க்குள் செலவிடலாம். இது தேசிய ஆடைகள் வடிவமைப்பு நிறுவனத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஒதுக்கீட்டை அமலாக்கம் செய்வதற்கான வசதியை மேம்படுத்தவும், நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
மத்திய ஜவுளி அமைச்சகம், தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை 1986ம் ஆண்டு சமுகங்கள் பதிவு சட்டத்தின் கீழ், தனி சமுகமாக நிருவியது. ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தோடு இது அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தனது 15 வளாகங்களில் முழுநேர பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றது. ஏற்கனவே உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவத்தின் வளாகங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை அமல்படுத்தவும், கூடுதல் வகுப்பறைகள், ஆராய்ச்சிக்கூடம், மாணவர்களுக்கு தங்கும் விடுதி, இயந்திரங்கள் கொள்முதல் ஆகியவற்றிக்கு இந்த திட்டம் உதவும்.