Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து குறித்த ஒப்பந்தம்


இந்தியாவுக்கும் எகிப்து நாட்டுக்கும் இடையே கடல்வழி போக்குவரத்துக்கான ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துப் பிரிவில் செயல்படுத்தப்படும் கூட்டுறவினால் கிடைக்கும் பயன்களை கருதி இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து பரஸ்பர உதவிக்கும் கூட்டுறவை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

இரு நாடுகளுக்கு சாதகமான தேதி மற்றும் இடம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்து இடப்படுவதன் மூலம் கடல்வழி விவகாரங்களில் சிறந்த கூட்டுறவும், மேம்பாடும் ஏற்படும். கடல்வழி போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பல்வேறு கடல் பிராந்திய விவகாரங்கள் குறித்த கல்வி அமைப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சியை அளிப்பது கடல் மற்றும் துறைமுகங்களில் வர்த்தகத்துக்கான சரக்குகளை குறித்த தகவல்களை பெறுவது, அவற்றை முறையாக ஏற்றி இறக்குவது கடல் வழி போக்குவரத்துப் பிரிவில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளுவது, கப்பல் கட்டுவது மற்றும் அவற்றை பழுது பார்ப்பது கடல் வாணிபம் குறித்த பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், துறைமுக வசதிகள் மற்றும் கடல் பிராந்திய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

****