பி.எம்.இந்தியா
போதை மருந்துகள், மனநிலை பாதிக்கும் பொருட்கள், வேதியியல் முன்னோடிப் பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்துதல், சட்ட விரோதமாக கொண்டு செல்லுதல் மற்றும் அது தொடர்பான குற்றங்களை குறைப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இருநாடுகளுக்கும் இடையே இந்த குற்றங்களை தகவல் பரிவர்த்தனை நிபுணத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் குறைப்பதற்கு பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டது இந்த ஒப்பந்தம். நாடுகளுக்கு இடையிலான போதை மருந்து கடத்தலை தடுத்தல், நிறுவன ரீதியிலான திறன்பட்ட கலந்தாலோசனைகளை உருவாக்குதல் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அமைப்புகளின் செயல்பாடுகளை தடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுவதற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப்பட்டுள்ளது.