பி.எம்.இந்தியா
விமானத்தில் உடன் பயணிக்கும் பாதுகாப்பு அலுவலர்களை விமானத்தில் ஏற்றி செல்வதற்கென ஜெர்மனி உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இடையே ஏற்கனவே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சர்வதேச உடன்படிக்கையை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும்.