Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐந்து இந்திய அறிவியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் நிறுவுவதற்கான மறு மதிப்பீடு


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, திருவனந்தபுரம், போபால், மொகாலி, பூனே, மற்றும் கொல்கத்தாவில், ஐந்து அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகங்கள் அமைப்பதற்கான மதிப்பீட்டை ரூ.2500 கோடியிலிருந்து ரூ 4799 கோடியாக உயர்த்தி மறுமதிப்பீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த நிறுவனங்களின் கட்டுமானம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மறுமதிப்பீடு சம்பந்தப்பட்ட அமைச்சரவையும், இந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளும், கட்டுமானத்தை விரைவுபடுத்த உதவும். இந்தக் கல்வி நிறுவனங்களில் 9275 மாணவர்கள், 925 ஆசிரியர்கள், மற்றும் 1020 பணியாளர்கள் தங்க நிரந்தரமான இடம் உருவாக்கி 2018-19ம் ஆண்டுக்குள் செயல்பட இந்த ஒதுக்கீடு உதவும்.

இந்த கல்வி நிலையங்கள், பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வி ஆகியவற்றை ஒரே இடத்தில் பயில வகை செய்யும். இந்த கல்வி நிலையங்கள், தேசிய ஆய்வகங்களோடும், இதர ஆய்வகங்களோடும் இணைந்து, ஆராய்ச்சிக்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கி, நிர்வாகத் தடைகளைக் கடந்து, விரிவான ஆராய்ச்சிக்கு வழிவகை செய்யும்.

லேசர், அதிவேக கடத்துமை, செமி கன்டக்டர், நானோ பொருட்கள் போன்றவை அடிப்படை அறிவியலில் இருந்து, உயர் அறிவியலுக்கு மாறியவை. இத்துறைகளில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், பெரும் வருவாயை ஏற்டுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவும்.

இந்திய பொருளாதார வளரச்சியில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப மனிதவள புரட்சி ஏற்படுவதற்கு தேவையான தகுதிவாய்ந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்க, இந்த கல்வி நிறுவனங்கள் உதவி செய்யும்.

***