பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ப்ரிக்ஸ் நாடுகளுடன் (ப்ரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென் ஆப்ரிக்கா) எரிசக்தி திறன் வளர்ச்சி மற்றும் எரிசக்தி சேமிப்பு தொடர்பாக, சமத்துவம் மற்றும் பரஸ்பர பலன்களின் அடிப்படையிலான ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
• எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிசக்தி திறன் வளர்ச்சி ஆகிய துறைகளில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்கண்ட பகுதிகளில் ஒத்துழைப்பு வழங்கும்.
• அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி
• மாநாடுகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல்
• தொழில்நுட்ப மாற்றம் மற்றும் திறன் வளர்த்தல்
• தொழில்நுட்ப வளர்ச்சி, கொள்கைகள் பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம்.
• ப்ரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளில், சம்பந்தப்பட்ட நாட்டின் சம்மதத்தோடு, எரிசக்தி திறனுள்ள, எரிசக்தியை சேமிக்கக் கூடிய திட்டங்களை தொழில்களில் அறிமுகப்படுத்துவது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ப்ரிக்ஸ் நாடுகள், எரிசக்தி திறன் வளர்ச்சி மற்றும் எரிசக்தி சேமிப்பிற்காக விரிவான திட்டத்தை நடைமுறை சாத்தியத்தை பரிசீலித்து தயாரிப்பது, பொதுவான திட்டங்களை தயாரிப்பது, அந்நாடுகளின் பொருளாதாரத்தில் எரிசக்தி திறன் வளர்ச்சி மற்றும் எரிசக்தி சேமிப்புக்கான திட்டங்களை முன்னெடுப்பது ஆகியவற்றை இந்த நாடுகள் பரிசீலிக்கும்.